இரண்டாவது முறையாக நடிகர் விஷால் படப்பிடிப்பில் விபத்து..!!
Wed, 1 Mar 2023

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம், ஈவிபி பிலிம் சிட்டியில் நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு நடந்து வருகிறது . இதில் குமணன்சாவடியை சேர்ந்த முருகன்(33), என்பவர் லைட் மேனாக வேலை செய்ய வந்தபோது எதிர்பாராத விதமாக லைட் கம்பம் அவரது நெற்றியில் பட்டதில் காயம் ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
கடந்த வாரம் இதே படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறையாக நடந்த விபத்தில் லைட் மேன் காயம் அடைந்தது படப்பிடிப்பு தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.