நடிகர் விவேக்கிற்கு திடீர் மாரடைப்பு- தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி..!
நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று சென்னையில் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து எல்லோரும் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் வலியிறுத்தினார்.
இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த போது நடிகர் விவேக்கிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவரை நடிகர் விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவது தெரியவந்துள்ளது.
மாரடைப்பு காரணமாகமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற்று வீட்டுக்கு திரும்ப வேண்டும் என அவருடைய ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
 - cini express.jpg)