ஆடம்பரம் இல்லாமல் நடந்து முடிந்த மறைந்த நடிகர் விவேக் மகள் திருமணம்..! 

 
1

தமிழ் சினிமாவின் நகைச்சுவை திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் தான் விவேக் திரையுலகில் ஜொலித்து வந்த வந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

தனது குடும்பத்தினர் அதீத அன்பு கொண்ட விவேவுக்கு தேஜஸ்வினி, அமிர்தா என இரு மகள்களும் பிரசன்னா என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் தேஜஸ்வினிக்கு திருமணம் இன்று மிகவும் எளிமையாக சத்தமின்றி நடந்து முடிந்துள்ளது .

பரத் என்பவரை கரம் பிடித்துள்ள தேஜஸ்வினி தங்களது திருமணத்தின் நினைவு பரிசாக திருமணத்திற்கு வருகை தந்தவர்களுக்கு மரக்கன்று, மூலிகை பூச்செடிகள் பரிசாக கொடுத்துள்ளனர் .

இயற்கை மற்றும் மரங்கள் மீது அதீத காதல் கொண்ட விவேக் அவர்களின் நினைவாக திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் பரிசாக வழங்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

From Around the web