திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு!

 
1

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது ஆவணி திருவிழா நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் நடிகர் யோகி பாபு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கோவிலில் மூலவர் சத்ரு சம்ஹார மூர்த்தி வள்ளி தெய்வானை, பெருமாள், ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார் நடிகர் யோகி பாபு.நடிகர் யோகி பாபுவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர் மேலும் யோகி பாபு கோவில் தூய்மை பணியாளரிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தார் 

From Around the web