பிரபல நடிகர் மர்ம மரணம் – அதிர்ச்சியில் உறைந்த கோலிவுட் சினிமா..!!

 
1

தமிழ் சினிமாவில் தெகிடி , மீசையை முறுக்கு , இரும்பு திரை உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் பிரதீப். இதையடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் வாழ்ந்து வரும் நடிகர் பிரதீப் கடந்த இரண்டு நாட்களாக அவரது நண்பர்களின் காலை எடுக்கவில்லை என கூறப்படுகிறது . இதையடுத்து சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்று பிரதீப்பை பார்க்க வந்துள்ளனர் .

அப்போது அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டள்ளது எவ்ளோதான் அழைத்தும் யாரும் கதவை திறக்கவில்லை என்பதால் பிரதீப்பின் நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீசார் பிரதீப் வீட்டு பூட்டை உடைத்துள்ளனர். அப்போது அவர் சடலமாக வீட்டிற்குள் கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் பிரதீப் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From Around the web