நடிகர் வெளியிட்ட பரபரப்பு தகவல் : திரைவிமர்சகரின் உண்மை முகம்..!
துப்பாக்கி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் வித்யுத் ஜமாலின் நடிப்பு விஜய்க்கு இணையாக நடித்திருப்பார் வில்லன் கதாபாத்திரத்தில். அவர் தனது நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் இடத்தில இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் சிறுஅவுக்கு நண்பனாக நடித்திருந்தார். தற்போது அவர் திரை விமர்சகர்கள் குறித்து ஆதாரத்துடன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புது படம் வெளியாகுது என்றால் தற்போது சினிமா தொழில் நுட்பத்தின் மூலம் வளர்ச்சியை கண்டுள்ளது. ஆனால், மக்கள் கூட்டம் திரைக்கு சென்று பார்ப்பதில்லை இதற்கு முக்கிய காரணமாக இருப்பது திரையரங்கம் மற்றும் திரை விமர்சகர். அதாவது, தியரங்கிற்கு சென்றால் படத்தின் டிக்கெட் விலையை விட அங்கு விக்கும் உணவு பண்டங்களே அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். அதை எல்லாம் எடுத்து கொள்ளாமல் ஓடிடியில் படம் வெளியிடுவதால் தான் மக்கள் கூட்டம் திரைக்கு வரவில்லை என பொய் என கூறுகின்றனர்.
இதற்கிடையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல சின்ன பட்ஜெட் திரைப்படங்களும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. முன்பெல்லாம் நேரடியாக திரையரங்குக்கு ரசிகர்கள் சென்றுவிடுவார்கள். ஆனால், தற்போது படத்தை பார்க்கவேண்டுமென்றால் முதலில் அந்த படத்தின் டீசர் அல்லது எதை மையமாக கொடுத்துள்ளது எல்லாம் ஆராய்ந்து முதல் நாள் படத்தின் ரீவியூ ஆகியவை கொண்டு தான் பார்க்கப்படுகிறது. காரணாம் தமிழில் படம் வெளியானதும் முன்னணி திரைவிமர்சகர்களான ப்ளு சட்டை மாறன், பிரசாந்த் ஆகியோரின் கருத்துக்களை கேட்ட பின்னரே ரசிகர்கள் படத்தை காணுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ப்ளு சட்டை மாறன் மீது தொடர்ந்து விமர்சனம் வந்து கொண்டு தான் இருக்கிறது. இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் அவர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அனைத்து படத்தையும் கழுவி கழுவி ஊதுவதையே இவர் தொடர்ச்சியாக செய்து வருகிறார் என ரசிகர்கள் கமெண்டில் பங்கம் செய்து வருவார்கள். அந்த வகையில் பாலிவுட்டை பொறுத்தவரை வித்யுத் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து உள்ளார். அவர் நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் வெளியான சில மணி நேரத்தில் திரைவிமர்சகர் ஒருவர் படத்திற்கு மாறாக பேசியுள்ளார்.
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வித்யூத், அந்த விமர்சகர் தன்னிடம் லஞ்சம் கேட்டதாகவும் அதை தான் தர முடியாது எனக் கூறியதால் தான் என்னுடைய படத்தை மோசமாக விமர்சித்தார் என ட்விட் செய்திருக்கிறார். மேலும் அந்த விமர்சகர் வித்யூத்தை இணையப்பக்கத்தில் பிளாக் செய்தது தொடர்பான புகைப்படத்தையும் ஆதரத்துடன் வெளியிட்டுள்ளார். இதற்கு பாலிவூட் ரசிகர்கள் சரமாரியாக அந்த விமர்சகரை தாக்கி வருகின்றனர்.மற்ற நடிகர்கள் இதனை வெளியில் கொண்டு வராமல் இருக்கும் நேரத்தில் நீங்களாவது கொண்டுவந்திங்களே என்று ஆதரவு கொடுத்து பாராட்டி வருகின்றனர். ஒருபக்கம் தன் மீது நடிகர் வித்யூத் வேண்டுமென்று விமர்சனம் செய்துவருவதாக இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.