அபிராமி குழந்தையை தத்தெடுத்தது ஏன்? இதுதான் காரணம்..!!

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிராமி, கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ‘வானவில்’ என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின், விருமாண்டி என பெரும் ஹிட்டடித்த படங்களில் நடித்தார்.
அதை தொடர்ந்து தன் சிறுவயது முதல் நண்பராக இருந்த ராகுல் என்பவரை 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த இவர், தமிழில் ஜோதிகா நடிப்பில் வெளியான 36 வயதினிலே படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
அதற்கு முன்னதாகவே விஸ்வரூபம் படத்தில் கதாநாயகி பூஜாவுக்கு தமிழ் டப்பிங் கொடுத்தார். மேலும் அந்த படத்தில் முக்கிய பிரிவிலும் பணியாற்றினார். அதற்கு பிறகு அவர் மலையாளத்தில் ஒளிப்பரபான சீரியலில் நடித்தார்.
இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு அபிரமாகி சமூகவலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அபிராமி மற்றும் அவரது கணவர் ராகுல் இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார்களாம். கடந்த வருடம் மகளை தத்தெடுத்ததாகவும் அவருக்கு கல்கி என பெயர் வைத்துள்ளதாக பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து அபிராமிக்கும் அவருடைய கணவர் ராகுலுக்கும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.