அன்னையர் தினத்தில் முக்கிய அறிவிப்பை அறிவித்தார் நடிகை அபிராமி..!!

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை அபிராமி பெண் குழந்தையை தத்தெடுத்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். அபிராமியும் அவரது கணவர் ராகுலும் கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர், தத்தெடுத்திருக்கும் அந்தச் சின்ன மலருக்கு அவர்கள் ‘கல்கி’ என்று பெயரிட்டுள்ளனர்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்புள்ள நண்பர்களே, ராகுலும் நானும் இப்போது கல்கி என்ற பெண் குழந்தைக்கு பெற்றோர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! கடந்த ஆண்டு நாங்கள் எங்கள் மகளை தத்தெடுத்தோம், அந்த நிகழ்வு எல்லா வகையிலும் எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இன்று நான் ஒரு புதிய தாயாக அன்னையர் தினத்தை கொண்டாடும் பாக்கியத்தைப் பெற்றுள்ளேன்! நாங்கள் எங்கள் புதிய பாத்திரத்தை சிறப்பாகச் செய்ய உங்கள் ஆசீர்வாதங்களை நானும் எனது குடும்பத்தினரும் கேட்டுக்கொள்கிறோம்!என்று குறிப்பிட்டிருந்த அபிராமி அனைத்துத் தாய்மார்களுக்கும் இந்த சிறப்பு விழாவில் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கவும் மறக்கவில்லை.
“உங்கள் அனைவருக்கும் அருமையான அன்னையர் தின வாழ்த்துக்கள்!! #அன்னையர் தினம் #புதிய அம்மா," என்று அவர் தனது வாழ்த்துக்களையும், நல்ல செய்தியையும் பகிர்ந்திரருந்தார்.