திடீரென 2-வது திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால்..! 

 
1

‘நீலதாமரா’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அமலாபால். தமிழில் ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் களமிறங்கினார். அதன்பிறகு ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்து விமர்சனத்திற்கு ஆளானார். பின்னர் ‘மைனா‘ என்ற திரைப்படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இதையடுத்து விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, அம்மா கணக்கு, வேலையில்லாத பட்டதாரி 2, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை ஆகிய படங்களில் நடித்துள்ளார். விக்ரம், விஜய், தனுஷ், ஆர்யா, சூர்யா என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இவர் இணைந்து நடித்துள்ளார். இதில் ராட்சசன் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை கொடுத்தது. ஆனால் ஆடை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் விமர்சனங்களுக்கு ஆளாகினார்.

இதனிடையே, நடிகை அமலா பால் தனது நீண்ட நாள் காதலன் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு, ஜகத், அமலாவுக்கு ப்ரோபோஸ் செய்யும் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

From Around the web