மீண்டும் காதலில் விழுந்துள்ளார் நடிகை அமலாபால்?

 
1

‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து, 2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

Amalapaul

இதன்பிறகு பாண்டிச்சேரியில் தங்கி இருந்த அமலாபால், பயணங்கள் செல்வது, பிடித்த இடத்திற்கு செல்வது என தன்னுடைய வாழ்வியலை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் 2020-ம் ஆண்டு இறுதியில் இந்தி பாடகர் பவிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் பரவியது. மேலும் அவர்கள் இருவரும் திருமண கோலத்தில் இருந்த புகைப்படங்களும் வெளியாக்கின.

இருந்தாலும் சில மாதங்கள் கழித்து அந்த செய்தியை அமலா பால் மறுத்தார். ஆனாலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர் எனவும் கூறப்பட்டது. இது எதையும் கண்டுகொள்ளாமல் இருந்த அமலா பால், பல வெளிநாடுகளுக்கு செல்வது, அட்வென்ச்சர் இடங்களுக்கு செல்வது என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது ஜெகத் தேசாய் என்பவர் அமலாபாலிடம் தன்னுடைய காதலை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவருடைய காதலை அமலாபால் ஏற்றுக் கொண்டுள்ளார். இதை ஜெகத் தேசாய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர்கள் இருவரும் முத்தமிட்டு நடனமாடும் வீடியோவும் அதில் பதிவிடப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் நடிகை அமலாபால் மீண்டும் காதலில் விழுந்துள்ளார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஜகத் தேசய் கோவாவை சேர்ந்தவர். சில்லா வில்லாஸ் என்ற நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியாக உள்ளார்.

From Around the web