நடிகை அஞ்சலி கூறிய அதிர்ச்சி தகவல் - ஏற்கனவே எனக்கு 4 முறை திருமணம் செய்து வைத்து விட்டார்கள்..!

 
1
தெலுங்கு திரைப்படமான ’கேங்ஸ் ஆப் கோதாவரி’ என்ற திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை அஞ்சலி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரமோஷன் விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த போது அதில் அஞ்சலி பேசிய போது ’ஒரு நல்ல படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும், நாம் கடுமையாக உழைத்த ஒரு படம் ரிலீஸ் ஆகும் போது மகிழ்ச்சியாக இருக்கும் என்றும், அந்த படம் வெற்றி பெறும்போது இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதனை அடுத்த திருமணம் குறித்த கேள்விக்கு பதில் கூறிய அஞ்சலி ,எனக்கு சமூக வலைதளத்தில் உள்ளவர்கள் மூன்று நான்கு முறை திருமணம் செய்து விட்டார்கள் என்றும் எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்றும் நான் தற்போது திரைப்படங்களில் பிசியாக இருப்பதால் திரை உலகில் சாதித்து விட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் என்னை பற்றி திருமணம் வதந்தி அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது என்றும் நானே ஒரு பையனை அழைத்துக் கொண்டு போய் என் பெற்றோர் முன் நிறுத்தி இவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறினால் அவர்கள் கூட அதை நம்ப மாட்டார்கள் என்றும் அந்த அளவுக்கு அடிக்கடி என்னுடைய திருமண குறித்த வதந்தி செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இந்த வதந்திகள் குறித்து கவலை அடைந்தேன் என்றும் என் வீட்டில் உள்ளவர்களும் கவலைப்பட்டார்கள் என்றும் ஆனால் இப்போது சாதாரணமாகிவிட்டது என்றும் அவர் கூறினார். நடிகை அஞ்சலியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From Around the web