நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்...?

 
நடிகை அஞ்சலி

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த கொரோனா ஊரடங்குக்கு இடையில் பல்வேறு நடிகைகள் இல்லற வாழ்க்கையில் இணைந்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னட சினிமாவில் நடித்த ப்ரிணிதா சுபாஷ் சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டார்.

அதேபோல தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமான யாமி கவுதம் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இந்த வரிசையில் விரைவில் அஞ்சலியும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தற்போது சென்னையில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு பெற்றோர்கள் திருமணம் பேசி முடித்துவிட்டதாக கூறப்படுகிறது. மாப்பிள்ளை ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விரைவில் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும், இல்லற வாழ்க்கையில் இணைந்தவுடன் சினிமாவை விட்டு விலகவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அஞ்சலி தரப்பில் இதுதொடர்பாக எந்தவிதமான தகவலையும் தெரிவிக்கவில்லை. 

From Around the web