வயதில் இளையவரை மணமுடிக்கும் நடிகை அனுஷ்கா..!

 
வயதில் இளையவரை மணமுடிக்கும் நடிகை அனுஷ்கா..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா தன்னை விட வயதில் குறைவான நபரை திருமணம் செய்யவுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகுபலி படத்தில் நடித்த பிறகு அனுஷ்கா இந்தியா முழுவதும் பிரபலமானார். அந்த படத்தில் நடித்த பிரபாஸும் அனுஷ்காவும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அனுஷ்கா தனக்கு ஒரு நல்ல தோழி என்று மட்டும் பிரபாஸ் தெரிவித்தார். அதுகுறித்த அனுஷ்கா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

அதை தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலபதிபரை அனுஷ்கா காதலித்து வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அது வெறும் வதந்தியாகவே போனது. பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடு கிரிக்கெட் வீரரை அனுஷ்கா காதலிப்பதாக சொல்லப்பட்டது. அதுவும் உறுதியாக தெரியவில்லை.

இதற்கிடையில் மனைவியை விவ்காரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வரும் பிரகாஷ் கோவலமுடியை நடிகை அனுஷ்கா திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் அதற்கு நடிகை அனுஷ்கா மறுப்பு தெரித்துவிட்டார். முன்னர் வெளியான திருமண செய்திகளையும் நடிகை அனுஷ்கா மறுத்தே வந்தார்.

இந்நிலையில் துபாயைச் சேர்ந்த தொழிலதிபரை நடிகை அனுஷ்கா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை அனுஷ்காவுக்கு தற்போது 39 வயதாகும் நிலையில், அந்த நபர் அவரை விட வயதில் இளையவர் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்து ஏதேனும் தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web