திருமணம் குறித்த கேள்விக்கு மனமுடைந்து வாய் திறந்த நடிகை அனுயா..!!

 
1

சிவா மனசுல சக்தி என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை அனுயா .

திரைப்படங்களில் நாயகியாக கலக்கி வந்த இவர் உலகநாயகன் தொகுத்து வழங்கிய தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அங்கேயும் நல்ல பெயரையும் புகழையும் சம்பாதித்தார்.

இதையடுத்து திரைப்படங்களில் அதிகம் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திரைப்படங்களில் பெரிதளவில் நடிக்காமல் அப்படியே நடிப்பதில் இருந்து ஒதுங்கிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை அனுயா திருமணம் குறித்த கேள்விக்கு மனமுடைந்து பதில் கொடுத்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது .

“துபாயில் படித்து முடித்தவுடன் சினிமாவுக்குள் வந்துவிட்டேன். எனக்கு தமிழ் தெரியாததால், நான் ஆரம்பத்தில் ஜீவா, சுந்தர் சி, விஜய் ஆண்டனி ஆகியோருடன் உறவில் இருந்ததாக செய்திகள் வெளியானது. அந்த செய்திகள் எனக்கு மிகுந்த மனவேதனையை கொடுத்தது . இணையத்தில் பரவி வந்த செய்திகள் அனைத்தும் தவறானது. நான் திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு என்னை சுற்றி நல்ல ஆண்களே இல்லை. பிறகு எங்கு திருமணம் செய்வது என மனமுடைந்து பேசியுள்ளார்.

From Around the web