நடிகை அஸ்வினி ஓபன் டாக் : தன்னிடம் அப்பா வயதுள்ள டைரக்டர் தவறாக...யாரந்த பிரபலம்..?

பிரபல நடிகை அஸ்வினி சமீபத்தில் ஒரு சேனலுக்கு தந்திருந்த பேட்டியில், "அவர் ஒரு பெரிய டைரக்டர்.. படம் விஷயமாக டிஸ்கஸ் செய்ய வேண்டும் என்று என்னை அவரது ஆபீசுக்கு வர சொல்லி இருந்தார்.. நானும் கிளம்பி போனேன்..
மாடியில் டைரக்டர் இருப்பதாக சொல்லவும், மாடிக்கு சென்றேன். ஆனால் அங்கே யாருமே இல்லை.. "உள்ளே வா" என்று மட்டும் ஒரு குரல் கேட்டது.. அப்போது அந்த டைரக்டர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்" என்று வருத்தத்துடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனின் Touring Talkies சேனலுக்கு, பிரபல நடிகை அஸ்வினி பேட்டி தந்துள்ளார்.. அப்போது, சித்ரா லட்சுமணன் அவரிடம் "அப்பா வயதுடைய இயக்குனர் உங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறீர்கள்? அப்போதே அதுபோன்ற மோசமான சூழ்நிலை இருந்ததா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அஸ்வினி, "ஆமாம், இருந்தது.. அவர் பிரபல டைரக்டர்தான்.. எப்போதுமே அம்மா என்னுடனேயே ஷூட்டிங் வருவார்.. அதனால், என்னால் அதுபோன்ற சூழ்நிலைகள் பலவற்றை தவிர்க்க முடிந்தது.. ஆனால், அன்றைய தினம் என்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை.. அதனால் அவரால் என்னுடன் வரமுடியாத நிலைமை. எனவே, நான் தனியாக ஷூட்டிங்கில் இருக்க வேண்டியதாயிற்று.
அப்போது அப்பா ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அந்த நபர் என்னிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தார்.. அந்த வயசுக்கு அதற்கான புரிதல்கூட எனக்கு இல்லை.. வீட்டுக்கு வந்ததுமே, ஏன் டல்லா இருக்கே? என்று என்னுடைய அம்மா கேட்டார். ஆனால் எனக்கு சொல்ல தெரியல. நான்தான் பெரிய தப்பு செய்துவிட்டதாக தோன்றியது. காரணம், அந்த டைரக்டரை அப்படி தவறாக கேட்கும் அளவுக்கு நான்தான் பேச அனுமதித்திருக்கிறேன்.
அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியாமல், தூக்க மாத்திரை சாப்பிட்டுட்டேன்.. அதுக்கப்புறம் என்னை மருத்துவமனையில் அனுமதிச்சு, என் உயிரை காப்பாற்றினார்கள்.. "இது உன்னுடைய தப்பு இல்லை, நீ அப்படி நினைக்காதே" என்றெல்லாம் என்னுடைய அம்மா எனக்கு நிறைய புத்தி சொன்னார்.. அதுக்கப்புறம்தான், அந்த டைரக்டரை நான் பார்க்கவேயில்லை.. ஒருவேளை இன்னைக்கு அவரை நேரில் சந்தித்தால், அவரை எதிர்கொள்ளக்கூடிய நம்பிக்கை இன்று எனக்கு இருக்கிறது.. "வணக்கம் சார், எப்படி இருக்கீங்க?" என்று என்னால் கேட்க முடியும். வெறுப்பை நான் தக்கவைத்து கொள்ளவில்லை.. அப்படி வெறுப்பை நான் வைத்து கொண்டால், அது என்னைதான் பாதிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.