நடிகை அதுல்யா ரவியின் பாஸ்போர்ட் மற்றும் பணம் திருட்டு..! 

 
1

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை அதுல்யா ரவி. இவர் குறுகிய மிக மிக காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் போன்றவற்றில் நடித்ததுடன், பெரிய ஹீரோக்களுக்கு ஈடாகவும் பிரபலமானார். அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், சமுத்திரக்கனி நடித்த “ஏமாளி” படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பிறகு, காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்த நிலையில், நாடோடிகள்2, “கேப்மாரி” உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து பிஸியான நடிகையாகிவிட்டார். இவரது சொந்த ஊர் கோவை ஆகும். வடவள்ளி அவுத்தி மருத்துவமனை மருதம் சாலையில் உள்ள வீட்டில், தன்னுடைய அம்மா விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார் அதுல்யா ரவி.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, இவரது வீட்டில் ரூ.2 ஆயிரம் பணம் திருடு போய்விட்டது.. இதனை தேடி பார்த்தபோதுதான், அதுல்யா ரவியின் பாஸ்போர்ட்டும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதுல்யா ரவியின் தாய் விஜயலட்சுமி, வீடு முழுவதும் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அதனால், வடவள்ளி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். போலீசாரும் இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அப்போதுதான், இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் செல்வி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.. தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்தவர் செல்வி.. 46 வயதாகும் செல்வியிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக அவர் பதில் தந்தார்..

பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். 40 வயதான சுபாஷினி என்ற தோழியையும், செல்வியையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது. இப்போது பாஸ்போர்ட்டை எங்கே வைத்திருக்கிறார்கள் என்ற விசாரணை நடந்து வருகிறது.

From Around the web