இளையராஜா கேடும் பாட மறுத்த பிரபல வாரிசு நடிகை..!!
பிரபலமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்த நடிகை, இளையாராஜா நேரடியாக கேட்டும் அவருடைய இசையில் பாட மறுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mar 30, 2023, 18:35 IST
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் விடுதலை. நாளை வெளியாகும் இந்த படத்தை எதிர்நோக்கி உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளார். அதனால் விடுதலை பட இசையமைப்பாளர் இளையராஜா, படத்தில் ஒரு பாடல் பாடுமாறு கேட்டுள்ளார். அதை பவானி ஸ்ரீ உடனடியாக மறுத்துவிட்டாராம்.

ஒரு இசை குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், தனக்கு பெரியளவில் இசைஞானம் கிடையாது மற்றும் பாடவும் தெரியாது. அதனால் தான் பாடவில்லை என்று நடிகை பவானி ஸ்ரீ கூறியுள்ளார்.
இளையராஜா இசையில் பாடுவதற்கு பலரும் தவம் கிடக்கும் நிலையில், அவரே வலிய வந்து கேட்டும் நடிகை ஒருவர் பாட மறுத்துள்ளது கோலிவுட் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 - cini express.jpg)