நடிகை பிந்து கோஷின் இன்றைய பரிதாப நிலை..! செத்து தொலையட்டும்னு பெத்த பசங்களே விட்டு போயிட்டாங்க...

ரஜினி, கமல், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் பிந்து கோஷ்.நடிகர் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற எல்லோரும் நலம் வாழ என்ற பாடலில் குழுவில் டான்ஸ் ஆடும் ஒருவராக சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு கோழி கூவுது, கௌரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, கொம்பேறி மூக்கன், விடுதலை, மங்கம்மாள் சபதம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பலரையும் சிரிக்க வைத்திருக்கிறார்.
ஆனால் இப்போது அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை குறைந்து உடலில் பல பிரச்சனைகளோடு தவித்துக் கொண்டிருக்கிறார்.அதில் அவர் பேசுகையில், நான் நிறைய பேரை சிரிக்க வச்சிருக்கேன். நிறைய சினிமா நடிகர்களோடு டான்ஸ் ஆடி இருக்கிறேன்.அவங்க எல்லோரும் சூட்டிங் ஸ்பாட்டில் நான் இருந்தால் சிரிச்சிட்டே இருப்பாங்க.
நான் கிட்டத்தட்ட 70 வருஷமா சினிமாவில் இருந்திருக்கிறேன். எனக்கு இப்போ 76 வயசாகுது. எனக்கு ஆரம்பத்தில் சின்ன சின்னதாக பிரச்சனை வர தொடங்கியது. இப்போ உடம்பு முழுக்க பிரச்சனை வந்துவிட்டது. முதலில் நான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணினது தான் தப்பு என்று நினைக்கிறேன். வயிறு பெரியதாக இருக்கிறது என்று அதற்காக சர்ஜரி செய்தேன். அப்போ 13 கிலோ சதையை எடுத்தேன்.
எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க பெரிய பையன் நான் வேண்டாம் என்று ஹைதராபாத்துக்கு போயிட்டான். சின்ன பையன் தான் அவனுடைய வருமானத்தில் என்னை பார்த்துக்கொண்டு வருகிறான். நான் ஆரம்பத்தில் இருந்த வீடு ஒன்றரை கிரவுண்டில் இருந்தது. இப்போ வீட்டில் எந்த பொருள் ரிப்பேர் ஆனாலும் வந்து பார்க்க ஆளில்லை. நடிகர் சங்கத்தில் இருந்து உதவி கிடைத்ததா என்று எல்லோரும் கேட்கிறார்கள் எனக்கு இப்போது அறக்கட்டளை ஒன்றிலிருந்து தான் உதவி வந்து கொண்டிருக்கிறது வேறு எதுவும் வரவில்லை.
நான் பல வருடங்களாக சினிமாவில் வேலை பார்த்தாலும் என்னுடைய கணவர் குடிகாரர் அவர் குடிச்சு குடிச்சி நான் சம்பாதிச்ச பணத்தை எல்லாம் செலவு பண்ணிட்டார். கமல்ஹாசனிடம் உதவி கேட்டு போன் பண்ணுனேன். அவர் பதில் சொல்லல. அடுத்து பிரபு, சத்யராஜ் என்று பலருக்கும் போன் செய்தேன் யாருமே எனக்கு உதவி செய்யல என்று கதறி அழுதபடியே அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
அதோடு தனக்கு மருத்துவ செலவுக்கு மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாய் செலவாகிறது. அதுபோல வீட்டு வாடகை 10,000 வருகிறது. அதனால் பல நேரங்களில் சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறேன் என்று பிந்து கோஷ் உருக்கமாக பேசியிருக்கிறார்.