நடிகை ப்ரியாமணியின் திருமணம் செல்லாது: முதல் மனைவி போலீசில் புகார்..!

 
முஸ்தபா ராஜ் மற்றும் ப்ரியாமணி

நடிகை ப்ரியாமணி மற்றும் முஸ்தபா ராஜ் திருமணம் செல்லாது என கணவரின் முதல் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் வெளியான பருத்திவீரன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றவர் ப்ரியாமணி. அதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து புகழ் பெற்றார். 

தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு குறைந்ததை அடுத்து பெங்களூருவைச் சேர்ந்த முஸ்தபா ராஜ் என்கிற தொழிலதிபரை கடந்த 2017-ம் ஆண்டு ப்ரியாமணி திருமணம் செய்துகொண்டார். அவருடைய கணவர் முஸ்தபா ராஜ் ஏற்கனவே திருமணமானவர்.

அவருடைய முதல் மனைவி பெயர் ஆயிஷா. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் ஆயிஷா பரியாமணி மற்றும் முஸ்தபா ராஜ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

அதன்படி தனக்கும் கணவர் முஸ்தபா ராஜுக்கு முறைப்படி  விவகாரத்து நடைபெறவில்லை. இதனால் ப்ரியாமணியை அவர் திருமணம் செய்தது செல்லாது. இதுகுறித்து முஸ்தபா மற்றும் பிரியாமணி மீது கிரிமினல் புகாரும் குடும்ப வன்முறை புகாரும் கொடுத்துள்ளதாவும் ஆயிஷா தெரிவித்துள்ளார்.

இதனால் தென்னிந்திய சினிமா உலகில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முஸ்தபா ராஜ், ஆயிஷாவுடன் கடந்த 2013-ம் ஆண்டு விவகாரத்து செய்து கொண்டேன். இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஆயிஷா கேள்வி எழுப்புவது புதிராக உள்ளது என்று கூறியுள்ளார்.

From Around the web