அடேங்கப்பா.... +2 தேர்வில் தேவயானியின் மகள் இவ்வளவு மார்க்கா..??
நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நடிகை தேவயானியின் மூத்த மகள் பெற்றுள்ள மதிப்பெண் விபரம் வெளியானதை அடுத்து, அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
May 11, 2023, 12:07 IST

தமிழகத்தில் பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியானது. நடப்பாண்டில் 8,03,385 மாணவ மாணவியர் தேர்வெழுதினர். அதில் பல்வேறு பிரபலங்களின் பிள்ளைகளும் அடங்குவர். அவர்களில் தேவயானியின் மூத்த மகளான இனியாவும் ஒருவர்.
ஏற்கனவே மகள் இனியா நன்றாக படிப்பார் என்று தேவயானி பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அவர் பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண் சார்ந்த விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி தேவயானியின் மகள் இனியா பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 492 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்த மதிப்பெண் விபரம் தெரியவந்ததை அடுத்து சமூகவலைதளங்களில் தேவயானியை டேக் செய்து பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். விரைவில் மாணவி இனியாவின் பட்டப்படிப்பு சார்ந்த விபரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.