இயற்கை விவசாயம் செய்யும் நடிகை தேவயாணி..!

 
தேவயாணி குடும்பத்தினர்
கணவர் ராஜகுமாரனுடன் சேர்ந்து நடிகை தேவயாணி இயற்கை விவசாயம் செய்து வருவது, அந்த ஊரில் இருக்கும் பலரையும் ஊக்கப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக இருந்த தேவயாணி, உடன் பணியாற்றிய ராஜகுமரானை திருமணம் செய்துகொண்டார். அதை தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கினார். இரண்டு மகள்கள் பிறந்த பிறகு, ராஜகுமாரனின் சொந்த ஊரான ஈரோடு அந்தியூரில் பல ஏக்கரில் நிலம் வாங்கி தம்பதிகள் இருவரும் விவசாயம் செய்ய தொடங்கினார்.

தற்போது இருவரும் இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளனர். பல ஏக்கரில் காய் கறிகள், பழங்கள் போன்றவற்றை பயிர் செய்து இயற்கை உரம் கொண்டு விவசாயம் செய்கின்றனர். இதை கவனித்த ஊர் மக்கள் பலரும் இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளனர்.

From Around the web