நடிகை ஃபாத்திமா பாபுவுக்கு திடீர் அறுவைச் சிகிச்சை..!
 

 
ஃபாத்திமா பாபு

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகை ஃபாத்திமா பாபு பொதுமக்கள் இந்த தவறை செய்துவிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் ஃபாத்திமா பாபு. இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு திடீரென கீழ்முதுகில் அதிக அளவுக்கு வலி ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்த போது அவரது சிறுநீரகத்தில் பெரிய கல் இருப்பதால் தான் இந்த வலி என தெரியவந்துள்ளது.

மேலும் சிறுநீரகம் முழுவதும் சீல் பிடித்து இருந்ததால், அதை சுத்தம் செய்துவிட்டு கல்லை உள்ளே தள்ளிவிட்டிருக்கிறார்கள். மேலும் ஒரு ஸ்டென்ட் பொருந்தி பாதையை கொஞ்சம் விரிவாக்கி உள்ளனர். இரண்டு வாரங்களுக்கு பிறகு அடுத்தகட்ட சிகிச்சை நடக்கும் என மருத்துவர்கள் கூறியதாக ஃபாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பொதுமக்கள் அனைவரும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பட்பபிடிப்பு தளங்களில் சிறுநீர் கழிக்க சங்கப்பட்டுக்கொண்டு இருந்ததால் இந்த பிரச்னை உருவாகியுள்ளது. அதனால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குறைந்தபட்சம் குடியுங்கள் என்றும் அவர் அனைவருக்கும் ஃபாத்திமா பாபு அறிவுரை கூறியுள்ளார்.

From Around the web