திருமணம் செய்துகொள்ளாமல் கர்ப்பத்தை அறிவித்தார் இலியானா..!!

இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை இலியானா, சமூகவலைதளத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ileana

தமிழில் 2016-ம் ஆண்டு வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இலியானா. அதை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ படத்தில் கடைசியாக நடித்தார்.

அதை தொடர்ந்து இந்தியில் வெளியான ‘பர்ஃபி’ படத்தில் இலியானா நடித்தார். அத்துடன் இந்திப் படங்களில் நடிக்க கவனம் செலுத்தினார். ஆனால் அங்கு அவருக்கு பெரியளவில் வரவேற்பு அமையவில்லை. இதனால் தென்னிந்திய சினிமாவில் அவர் இருந்த வரவேற்பு குறைந்து போனது.

மீண்டும் தெலுங்குப் படங்களில் நடிக்க வந்தவருக்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் போனது. இதற்கிடையில் ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ என்பவரை அவர் காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின.

ஆனால் எதுவும் உண்மையில்லை என்று இலியானா விளக்கம் அளித்தார். எனினும் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். இதையடுத்து கத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் இலியானா, தற்போது சமூகவலைதளத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார். குழந்தை அணியும் ஆடை புகைப்படத்துடன், அம்மா என்று பொறிக்கப்பட்டு ஒரு சங்கிலியை அவர் பதிவிட்டுள்ளார். 

இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ள இலியானா, விரைவில் தன்னுடைய காதலர் குறித்த விபரங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web