தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் 2வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை..!!

 
1

விரட்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால். இவர் தெலுங்கு , ஹிந்தி, கன்னடத்திலும் நடித்து வருகிறார்.தற்போது பாலகிருஷ்ணாவுடன் இணைந்து அகண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பிரக்யாவிற்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது.தீவிர சிகிச்சைக்குப் பிறகு அதில் இருந்து மீண்டதாக அறிவித்தார். தற்போது 2 வது முறையாக மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

அதில், ’எனக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் கொரோனாவால் 2வது முறை பாதிக்கப்பட்டிருக்கிறேன்.இதனால் மீண்டும் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


 

From Around the web