பெயரில் இருந்த சமூக அடையாளத்தை நீக்கினார் நடிகை ஜனனி..!

 
ஜனனி ஐயர்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும் தொலைக்காட்சி பிரபலமுமான நடிகை ஜனனி ஐயர் தன்னுடைய பெயரில் இருந்த சாதி அடையாளத்தி நீக்கி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சன் டிவி உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக கேரியரை துவங்கியவர் ஜனனி ஐயர். பாலா இயக்கத்தில் வெளியான ’அவன் இவன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து தெகிடி, அதே கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனமீர்த்தார். மேலும் பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்று நிகழ்ச்சியின் இறுதுவரை இருந்தார். தொடர்ந்து விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இவர் கேரியரை தொடங்கிய புதியதில் இருந்தே தன்னுடைய பெயரை ஜனனி ஐயர் என்றே குறிப்பிட்டு வந்தார். இந்நிலையில் அவருடைய பெயரில் இருந்த சமூக அடையாளத்தை நீக்கியுள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘மாற்றம் ஒன்றே மாறாதது, என்றும் ஒற்றுமையுடன்’ என குறிப்பிட்டு தன் பெயரில் ஜனினியை மட்டுமே கீழே குறிப்பிட்டுள்ளார். எதற்காக தன்னுடைய சமூக அடையாளத்தை அவர் பெயரில் இருந்து நீக்கினார் என்பது தெரியவில்லை. 
 

From Around the web