நடிகை ஜீவிதா வருத்தம்..! கடைசியில் இப்படி பண்ணிட்டாங்க!

 
1

பொதுவாக சினிமா, சீரியல் வாழ்க்கையில் பல நடிகைகள் நடிகர்களுக்கு திறமையும் கடினமான உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. தங்களுடைய திறமையை நிரூபிப்பதற்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல ஒருவர்தான் நடிகை ஜீவிதா.

இவர் சின்னத்திரையில் பல வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரு தைரியமான பெண்தான். எந்த விஷயங்களாக இருந்தாலும் பேட்டிகளில் பளிச் என்று பேசி விடுவார். அதுபோல அவருடைய குடும்பத்தையும் இவர்தான் தூண் போல காத்து வருகிறார்.

பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் வரும் கதாநாயகியின் ரியல் வெர்ஷன் இவர்தான் என்று சொல்லலாம். அதனால் தானோ என்னவோ அதே மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியல் மூலமாகத்தான் இவருக்கு சின்னத்திரையில் அறிமுகம் கிடைத்திருக்கிறது. ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் அவருடைய குடும்பத்தோடு எடுக்கும் வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுபோல பல சீரியல்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் அவருடைய அக்காவாக இவர் நடித்திருந்தார். அதுபோல இவர் அதிகமான திரைப்படங்களை மிஸ் பண்ணி இருக்கிறார். கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நான் மிஸ் பண்ணி விட்டேன் குறைந்தபட்சம் 70 திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறேன் என்று வருத்தத்தோடு சொல்லி இருக்கிறார்.

அதற்கு காரணம் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தான். அதுபோல சிலர் எதனால் என்னை வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அடுத்தவர்கள் கூட இந்த படத்தில் நீங்கள் இருக்குறீங்க என்று சொல்லுவாங்க கடைசியில் அந்த படமே வந்துவிடும் நம்மை நடிக்க கூப்பிட மாட்டார்கள்.

 

சரி போகட்டும் என்று பார்த்தால் சில நன்கு பழக்கமானவர்கள் கூட என்னுடைய படத்தில் நீங்க நடிக்கிறீங்க என்று சொல்லியிருக்கிறார்கள் கடைசியில் பார்த்தால் அந்த கேரக்டரில் வேற ஒரு நடிகையை நடிக்க வைத்து விடுகிறார்கள். அதுபோலத்தான் ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் சகோதரியாக எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.. நானும் சரி என்று டெஸ்ட் சூட்டெல்லாம் எடுத்துவிட்டு வந்தேன் அப்போ எல்லாம் ஓகே என்று சொல்லி இருந்தார்கள் பிறகு என்னை கூப்பிடவே இல்லை. வேற நடிகையை நடிக்க வைத்து விட்டார்கள். அதுபோல ரெக்கை திரைப்படத்தை இயக்கிய ரத்தினவேல் எனக்கு தெரிந்தவர் தான்.

அவர் என்னிடம் பேசும்போது இந்த படத்தில் உங்களை நினைச்சு தான் "கண்ணம்மா கண்ணம்மா" பாடல் எழுதி இருக்கிறேன் உங்க கண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்கள பார்க்கும்போது என்னுடைய அத்தை பீல் வரும் அதனால் கண்டிப்பாக நீங்கள் இந்த படத்தில் நடிக்கிறீங்க என்று சொன்னாங்க. ஆனால் என்ன நடந்ததுன்னு தெரியல கடைசியில் அந்த கேரக்டரில் வேற நடிகையை நடிக்க வச்சுட்டாங்க. இது போல எனக்கு சினிமா துறையில் பல ஏமாற்றங்கள் நடந்து இருக்கிறது. ஒரு சிலர் மட்டும் சொன்னது போலவே நம்பி நமக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள் என்று விரக்தியாக ஜீவிதா பேசியிருக்கிறார்.

From Around the web