தலைகீழாக நின்று கைகளில் நடக்கும் ஜோதிகா..!!

நடிகை ஜோதிகா தலைகீழாக நின்று, கைகளால் மாடிப்படிகளை இறங்குவது போன்று தீவிர வொர்க்-அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
 
jyothika

திருமணத்துக்கு பிறகு மீண்டும் பரபரப்பாக சினிமாவில் நடித்து வருகிறார் ஜோதிகா. திருமணத்துக்கு முன்பாக நடித்ததை விடவும், இப்போது மிகவும் கவனமாக படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் மற்றும் உடன்பிறப்பே போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன.

இதையடுத்து தமிழில் நடிப்பதற்கு சற்று இடைவெளி விட்டுள்ளார். இப்போதைக்கு மலையாளத்தில் மம்முட்டியுடன் காதல் - தி கோர் என்கிற படத்திலும் இந்தியில் ஸ்ரீ என்கிற படத்தில் அவர் நடித்து வருகிறார். தற்போது ஜோதிகா தனது குடும்பத்தினருடன் மும்பையில் செட்டிலாகிவிட்டார். அங்கிருந்து சென்னைக்கு வந்து ஷூட்டிங்கில் பங்கெடுத்து வருகிறார் சூர்யா.

இந்நிலையில் மிகவும் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ஜோதிகா வெளியிட்டுள்ளார். அதில் தலைகீழாக நின்று, டம்புள்ஸ் எடுப்பது, பந்துகளை உருட்டி விளையாடுவது, மாடிப்படிக்கட்டுகளில் இறங்குவது போன்ற கடுமையான பயிற்சிகளை ஜோதிகா மேற்கொண்டு வருகிறார்.

எதற்காக இவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய உடற்பயிற்சி வீடியோ பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது. அதை பார்க்கும் பலர் ஜோதிகாவுக்கு குடோஸ் போட்டு வருகின்றனர். தற்போது ஜோதிகாவுக்கு 44 வயதாகிறது. பதின்ம வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

எனினும் தனது உடல் விஷயத்தில் ஜோதிகா கவனமுடன் இருப்பது பலரையும் கவர்ந்துள்ளது. உடல்சார்ந்த விஷயங்களில் நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஜோதிகாவின் வொர்க் அவுட் வீடியோ நமக்கு உணர்த்துகிறது.


 

From Around the web