’அத்துமீறினால் கொலை தான்’ வாசலில் போர்டு மாட்டிய கங்கனா..!!

கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த வந்த கங்கனா, தற்போது புதிய சர்ச்சையை உருவாக்கிவிட்டார். இதனால் அவர் நடிப்பில் தமிழில் தயாராகி வரும் ‘சந்திரமுகி- 2’ படத்தின் வெளியீடு பாதிக்கப்படுமா என்கிற அச்சம் படக்குழுவுக்கு எழுந்துள்ளது.
 
kangana ranaut

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு எப்போதும் சர்ச்சைகள் என்றால் மிகவும் பிடிக்கும். தான் நடிக்கும் படங்களை விடவும், சர்ச்சைகளே தன்னை மக்களிடம் கொண்டு சேர்ப்பதாக பெரிதும் நம்புகிறார். கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் ஊடக வெளிச்சாமல் படாமல் இருந்து வந்தார். தான் உண்டு, தன் வேலை உண்டு என்கிற கொள்கைக்கு கங்கனா மாறிவிட்டதாகக் கூட செய்திகள் வந்தன.  ஆனால் ”ஆடின காலும்; பாடின வாயும் சும்மா இருக்காது” என்று சொல்வார்களே, அதுபோன்று, தன்னை பற்றி ஊர் முழுக்க பேசுவதற்கான அடுத்த சர்ச்சையை கங்கனா துவங்கி வைத்துள்ளார்.

கங்கனா ரனாவத், இந்திப் படங்களை விடவும் தென்னிந்திய சினிமாக்களில் நடிப்பதற்கு அதிக கவனம் செலுத்த துவங்கினர். ’தலைவி’ படத்துக்கு பிறகு, தமிழில் தயாராகி வரும் ‘சந்திரமுகி- 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அவர் நடிக்கும் படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மும்பை அந்தேரியில் இருக்கும் தனது ஆடம்பர பங்களாவில் பரமாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

kangana ranaut home

இதுதொடர்பான வீடியோவை தனது சமூகவலைதளத்தில் கங்கனா பதிவிட்டு இருந்தார். அதில்,  அவரது வீட்டு வாசலில் புதியதாக ஒரு மாட்டப்பட்டிருக்கும் போர்டில் ஒரு அறிவிப்பு இடம்பெற்றுள்ளது, “ அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்றால், துப்பாக்கியால் சுடப்படுவீர்கள். ஒருவேளை உயிர் பிழைத்தால் மீண்டும் சுடப்படுவீர்கள்” என்று போர்டில் எழுதப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அரசுக்கும் கங்கனாவுக்கும் இடையில் மிகப்பெரிய மோதல் வெடித்தது. அப்போது நகராட்சி நிர்வாகம், கங்கனா வீட்டின் முன் பகுதி சட்டத்துக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக கூறி இடித்துவிட்டது. அதற்கு கங்கனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்தார். ஆனால் வழக்கு விசாரணைக்கு வருவதற்குள் மஹாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது.

kangana

இப்போது அவருடைய வீட்டுக்கு பிரச்னை இல்லை என்றாலும், நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அவ்வப்போது கங்கனாவுக்கு குடைச்சல் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்காகவே அவர் இதுபோன்ற ‘அறிவிப்பு பலகையை’ வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவருடைய இந்த செயல் பொதுமக்களை மிகவும் சங்கடம் அடையச் செய்துள்ளது. “முதலில் சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். யாரோ மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்த ஒட்டுமொத்த மக்களையும் இழிவுப்படுத்தக் கூடாது, மற்றவர்களை மிரட்டும் வகையில் இவ்வாறு அறிவிப்பு பலகை வைப்பது சரிதானா? என்று கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 
 

From Around the web