ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நடிகை கங்கனா ரணாவத்..!
Sep 5, 2021, 06:05 IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் ‘தலைவி’. இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர்.

தலைவி படத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை, எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு பல்வேறு தடைகளை கடந்து முதல்வர் ஆவது வரை உள்ள காட்சிகள் இடம்பெற்று உள்ளது
ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கதாபாத்திரத்தில் மதுபாலா, சசிகலாவாக பூர்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் இயக்கி உள்ளார்.

வரும் 10-ம் தேதி ‘தலைவி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து இன்று சென்னை, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடிகை கங்கனா ரணாவத் மரியாதை செலுத்தினார்.
 - cini express.jpg)