மீண்டும் படம் இயக்கும் முடிவில் நடிகை கங்கனா ரணாவத்..!

 
கங்கனா ரணாவத்

’மணிகர்னிகா’ படத்தை தொடர்ந்து இந்திரா காந்தி வேடத்தில் தான் நடிக்கும் படத்தை கங்கனா ரணாவத் இயக்கவுள்ள விபரம் தெரியவந்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் நேரத்துக்கு ஏதையாவது பேசிவிட்டு, சர்ச்சையை கிளப்பிவிட்டுவிட்டு அதில் குளிர் காய்பவர் நடிகை கங்கனா ரணாவத். அவருடைய நடிப்பு திறமையை கொண்டாடும் பாலிவுட் திரையுலகம், எதற்கும் அவரிடம் இருந்ந்து எட்டடி தள்ளி நின்றே அணுசரித்து செல்லும்.

தமிழ் மற்றும் இந்தியில் தயாராகியுள்ள ‘தலைவி’ படத்தில் நடித்து முடித்துள்ளார் கங்கனா ரணாவத். ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இப்படம் திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து மீண்டும் வாழ்க்கை வரலாறு படத்தில் தான் நடிக்கிறார் கங்கனா ரணாவத். இந்திரா காந்தி ஆட்சியின் போது ஏற்படுத்தப்பட்ட ‘அவசரநிலையை’ மையப்படுத்தி எமெர்ஜன்சி என்கிற படம் உருவாகவுள்ளது.

இந்த படத்தில் கங்கனா மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கிறார். இப்படத்தில் நடிக்கவும் மட்டுமில்லாமல், அப்படத்தை இயக்கவும் உள்ளார் கங்கனா. ஏற்கனவே அவர் மணிகர்னிகா என்கிற படத்தை இயக்கி தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. 

From Around the web