ஆபாசமாக பேசிய நபருக்கு நடிகை கனிகா கொடுத்த தரமான பதிலடி..!

 
1

சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துவரும் நடிகைகள் தொடர்ச்சியாக சினிமாவில் நீடிப்பது கிடையாது. ஒரு சில நடிகைகள் மட்டும்தான் தொடர்ச்சியாக பல சினிமாக்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் முதல் இரண்டு மூன்று திரைப்படங்களில் ஹிட் கொடுத்தாலும் பிறகு காணாமல் போய்விடுவார்கள்..அந்த மாதிரி தான் நடிகை கனிகாவும். இவர் பைவ் ஸ்டார் திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு பெரிய அளவில் கனிகாவிற்கு வாய்ப்பு வராததால் பிறமொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்‌.

தமிழ் திரையுலகில் பைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமானவர் கனிகா. இதையடுத்து சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துக்கு ஜோடியாக வரலாறு போன்ற படங்களில் நடித்து படிப்படியாக நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவந்தார். வரலாறு படத்தில் நடித்த பின்னர் தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் கனிகா.

இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டு கேரளாவில் செட்டில் ஆனார். பின்னர் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த அவர், தமிழில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார்.இந்த சீரியலில் ஆதிகுணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கனிகா. 

நடிகையாக மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார் கனிகா. சச்சின் படத்தில் ஜெனிலியா, ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் சதா, சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயா என பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்தது கனிகா தான்.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் ஆபாசமாக கமெண்ட் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் கனிகா. அதில் அவர் கூறியதாவது : “உங்க வீட்டுல இருக்குற பெண்களிடம் இருப்பது தான் என்னிடமும் இருக்கிறது. எதற்காக இப்படி மோசமான கருத்துகளை பதிவிடுகிறார்கள் என தெரியவில்லை. எனது உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் ஹார்மோன் மாற்றம் தான்.திருமணமாகி கர்ப்பமானவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதைப்பற்றி கொச்சையாக பதிவிடுபவர்களை பார்க்கும் போது அவர்களெல்லாம் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று தான் யோசிக்க தோன்றுகிறது.

From Around the web