தலைமறைவாகி இருந்த நடிகை கஸ்தூரி நேற்றிரவு கைது..!
Nov 17, 2024, 06:35 IST

நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், எழும்பூர் போலீசார், இரண்டு தனிப்படைகளை அமைத்து தேடி வந்த நிலையில் பின்னர், ஹைதராபாத் நகரில் அவர் பதுங்கி இருப்பதை உறுதி செய்த போலீசார், அதிரடி நடவடிக்கையாக தற்போது அவரை கைது செய்துள்ளனர்.
கஸ்தூரியின் அவதூறான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தற்போது அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதால், விவகாரம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.