சமூகவலைத்தளத்தில் நடிகை கஸ்தூரி போட்ட வீடியோவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..! 

 
1

17 வது வயதில் ஆத்தா உன் கோவிலிலே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கஸ்தூரி.இருப்பினும் நடிகர் கமலஹாசனின் இந்தியன் திரைப்படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர். இதற்குப் பிறகு திருமணமான கஸ்தூரி அமெரிக்காவில் செட்டிலானார் அதனை தொடர்ந்து சுமார் ஏழு ஆண்டுகள் திரைத்துறையை விட்டு விலகி இருந்தார். அதற்குப் பின்பு கடந்த 2009 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் நடிக்க தொடங்கினார்.

இருப்பினும் நடிப்பு மூலம் இவரை அறிந்து கொள்பவர்கள் தற்போது குறைவாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வைப்பதன் மூலம் அதிகமாகவும் இவர் அறியப்பட்டு வருகிறார். ஏனென்றால் சமூக வலைதளத்தில் இவர் முன்வைக்கும் பல கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் அரசியல் முழுவதும் பேசப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட நடிகர் கமலஹாசன் திமுக பக்கம் திரும்பியதும் திமுக கூட்டணியில் ஒரு எம்பி சீட்டுக்காக திமுகவுடன் இணைந்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்டது குறித்த செய்தி வெளியான உடனே முதல் ஆளாக தனது விமர்சனத்தை முன்வைத்தவர்களில் இந்த கஸ்தூரியும் ஒருவர்! அதற்கு முன்பாக உதயநிதி சனாதனம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசிய பொழுது தனது சமூக வலைதள பக்கத்தில், நீங்க சொல்ற டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றியிருக்கிறதே அவங்கள என்ன பண்றதா உத்தேசம்... ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது திராவிடியல் பரம்பரையில் யுக்தி, இவ்வளவு வெறுப்பு சனாதனத்தின் மேல் இருக்கிறது என்றால் இந்து கோவில்களின் சொத்து மட்டும் உங்களுக்கு கேட்குதா முதலில் உண்டியலில் இருந்து கையை எடுங்க என்று உதயநிதியை பங்கமாக கலாய்த்து திமுகவையும் விமர்சனம் செய்திருந்தார். 

இப்படி தொடர்ச்சியாக அரசியல் குறித்த கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் தனது பதிவை இட்டு வரும் கஸ்தூரி சமீபத்தில் தான் வாங்கிய ஒரு செருப்பு குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்ட கஸ்தூரி, அதில் சில நாட்களுக்கு முன்பு சுமார் 4500 கொடுத்து வாங்கிய ஒரு செப்பல் ஒரு மாதத்திற்குள் கிழிந்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் தன்னிடம் இருக்கின்ற செருப்பில் இதுவே மிக அதிகம் என்று கூறி அந்த செருப்பின் நிறுவனத்தின் பெயரையும் குறை கூறி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு நெடிசன்கள் பலர் கஸ்தூரியை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த செருப்பையா 4500 கொடுத்து வாங்கினீங்க என்றும் கேள்வி கேட்டு ஆஃபரில் வாங்கினால் இப்படித்தான் பாதியிலே கிழிந்து போய்விடும் என்று பல நக்கல் கமாண்டுகளையும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். இது தற்போது சமூக வலைத்தளம் முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளது, அதோடு இனிமேல் யாருடைய செருப்பு பிஞ்சாலும் முதலில் செருப்பு பிஞ்ச வீடியோவை வெளியிட்ட கஸ்தூரியின் நினைவு தானே வரும் என்ற வகையில் இந்த வீடியோவும் அதற்கு நெடிசன்கள் பலர் முன்வைத்து வரும் கமெண்ட்களும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

From Around the web