செல்வராகவன் பட ஷூட்டிங்கில் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..!
 

 
செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ்

செல்வராகவன் நடித்து வரும் படத்திற்கான ஷூட்டிங்கில் நடிகை கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் ப்டாம் ‘சாணிக்காயிதம்’. ஆரண்ய காண்டம் படத்தில் சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதை வென்ற அருண் மாதேஸ்வரன் தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தாமதமானது. ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் இரண்டாம் ஊரடங்கு காரணமாகவும் ஷூட்டிங் பணிகள் தேக்கம் அடைந்தன.

தற்போது மாநில அரசு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டத்தை அடுத்து, தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்களுக்கான ஷூட்டிங் துவங்கியுள்ளது. இதையடுத்து மீண்டும் சாணிக்காயிதம் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

From Around the web