ராசியில்லாத நடிகை என்ற முத்திரை என் மேல் விழுந்தது - நடிகை கீர்த்தி சுரேஷ் 

 
1

தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களையும் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் ஹோம்லி கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த கீர்த்தி சுரேஷை கிளாமர் கேரக்டர்களிலும் பார்க்க முடிகிறது. தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளிலும் இவர் அதீத கவர்ச்சியுடன் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தமிழில் உதயநிதியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த மாமன்னன் படம் வெளியானது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷின் கேரக்டரும் கவனம் பெற்றது. படம் மிகச்சிறந்த வெற்றியை பெற்றுள்ள நிலையில் தமிழில் அடுத்தடுத்து ரகு தாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகையாக நடித்துவரும் கீர்த்தி, அடுத்ததாக பாலிவுட்டிலும் நடிக்கவுள்ளார். வருண் தவானுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. படத்தை அட்லீ தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீண்ட காலங்களாகவே கீர்த்தி சுரேஷிற்கு பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் வந்த நிலையில், அவற்றில் அவர் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது VD18 படத்தில் இணைந்துள்ளார். 

அடுத்ததாக வரும் 11ம் தேதி சிரஞ்சீவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள போலா சங்கர் படம் வெளியாகவுள்ளது. தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

1

படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடந்த நிலையில், நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற கெட்டப், அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. துவக்கத்தில் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்த கீர்த்தி சுரேஷ் மீது ஒரு கட்டத்தில் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை விழுந்தது. இதுகுறித்து கீர்த்தி தனது சமீபத்திய பேட்டியில், தான் நடித்தால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடும் என்றும் கூறப்பட்டதாகவும் கடினமாக உழைத்துதான் தான் இவற்றையெல்லாம் கடந்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து தென்னிந்திய மொழிப்படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

From Around the web