கவர்ச்சிக்கு மாறிய கிரண் எடுத்த திடீர் ’ட்விஸ்டு’..!!

சினிமாவை விட்டு ஒதுங்கிய நடிகை கிரண் ஆன்மிக பாதைக்கு திரும்பியுள்ளதாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
 
kiran

இந்தியில் 2001-ம் ஆண்டு வெளியான ‘யாதீன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கிரண். அதையடுத்து தெலுங்குப் படங்களில் நடித்து வந்தவர், 2002-ம் ஆண்டு தமிழில் ‘ஜெமினி’ படம் மூலம் கிரண் அறிமுகமானார்.

தொடர்ந்து பல்வேறு தென்னிந்தியப் படங்களில் நடித்தார். வில்லன், அன்பே சிவம், பரசுராம், அரசு, வின்னர் போன்ற ஹிட் படங்களில் நடித்தார். எனினும் அவருக்கு தொடர்ந்து சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் கவரிச்சி நடிகையாக மாறினார். சமூகவலைதளங்களில் அவ்வப்போது மிகவும் கவர்ச்சிக்கரமான படங்களை பதிவிட்டு வந்தார். தனியாக ஒரு தளம் உருவாக்கி, தனது கவர்ச்சிப் படங்களை காண்பதற்கு கட்டணம் வசூலிக்க துவங்கினார்.

அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ள கிரண், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதனுடன், தான் ஆன்மிக பாதைக்கு திரும்பிவிட்டேன். இதற்கு ரசிகர்களின் வாழ்த்தையும் ஆதரவையும் நாடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

From Around the web