சிங்கிளாக இருக்கும் சல்மான் கானிடம் உதட்டு முத்தம் வாங்கிய நடிகை..!

 
சிங்கிளாக இருக்கும் சல்மான் கானிடம் உதட்டு முத்தம் வாங்கிய நடிகை..!

பாலிவுட் சினிமாவில் 30 ஆண்டுகளாக எந்த நடிகையுடனும் நெருக்கமாக நடிக்காமல் இருந்த சல்மான் கான் முதன்முதலாக தன்னுடைய சபதத்தை மீறி நடித்துள்ளார்.

வாண்டட், தபாங்க்- 3 படங்களை தொடர்ந்து சல்மான் கான் மற்றும் பிரபுதேவா மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் ‘ராதே’. வரும் ரம்ஜான் பண்டிகை அன்று ரிலீஸாகும் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

பாலிவுட் படங்களில் முத்தமிட்டுக் கொள்வது, கதாநாயகனும் கதாநாயகியும் நெருக்கமாக நடிப்பது போன்ற காட்சிகள் சகஜமாக இருக்கும். ஆனால் சல்மான் கான் ஒருபோதும் நடிகைகளிடம் நெருக்கத்துடன் நடித்தது கிடையாது.

தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் இதற்கு நேர்மறையானவர் என்று சொல்லப்பட்டாலும், திரைப்படங்களில் ஹீரோயின்களுடன் அவர் நெருக்கமாக நடித்தது. அதனால் அவருடைய படங்களில் நடிக்க அனைத்து கதாநாயகிகளும் ஆசைப்படுவார்கள்.

இதுகுறித்து ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்டதற்கு, தன்னுடைய அம்மாவுக்கு பெண்களுடன் நெருக்கமாக நடிப்பது பிடிக்காது. அதனால் நான் நெருக்கமாக நடிப்பதும் இல்லை, முத்தக்காட்சிகளில் நடிப்பதும் இல்லை என்று தெரிவித்தார்.

ஆனால் தன்னுடைய 30 வருட திரைவாழ்க்கையில் அந்த பாணியில் இருந்து முதல் முறையாக மீறியுள்ளார் சல்மான் கான். ராதே படத்தில் தன்னுடன் இணைந்து நடிக்கும் தீஷா பதானிக்கு உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சியில் அவர் நடித்துள்ளார். இதுதொடர்பான காட்சி ராதே படத்தின் டிரெய்லரிலும் இடம்பெற்றுள்ளது. 

From Around the web