கொரோனாவுக்கு தன்னுடைய மீம்ஸை தானே பகிர்ந்த நடிகை லைலா..!
 

 
லைலா

பிதாமகன் படத்தில் இடம்பெற்ற வசனத்தை கொரோனா விழிப்புணர்வு செய்தியாக மாற்றி உருவாக்கப்பட்ட மீம்ஸ் படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் நடிகை லைலா.

விஜய்காந்த் நடிப்பில் வெளியான ‘கள்ளழகர்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார் நடிகை லைலா. பிறகு அஜித்துடன் நடித்த தீனா படம் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு பெற்று தந்தது. அதை தொடர்ந்து தில், அள்ளித்தந்த வானம், நந்தா, பிதாமகன், உள்ளம் கேட்குமே, கண்டநாள் முதல் என வரிசையாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார் லைலா.

திருமணம் முடிந்து மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வரும் லைலா, கொரோனா ஊரடங்குக்கு முன்னதாக பிரபல தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சி  நடுவராக இருந்தார். தற்போது மீண்டும் மும்பை சென்றுவிட்ட அவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை பலரும் பல விதங்களில் செய்து வருகின்றனர். பிதாமகன் படத்தில் லைலா பேசிய வசனத்தை சிலர் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரமாக மாற்றி வெளியிட்டுள்ளனர். அதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து நடிகை லைலா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

From Around the web