கண்ணழகி நடிகை மாதவி திருமணம் செய்ததன் பின்னணி..! சாமியார் தான் காரணமா ? பயில்வான் ஓபன் டாக்..! 

 
1

தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான தான் நடிகை மாதவி. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அவர் நடித்த முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்து தமிழில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.


இதைத்தொடர்ந்து, ராஜபார்வை, டிக் டிக் டிக், தம்பிக்கு எந்த ஊரு, காக்கி சட்டை என பல வெற்றிப்படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 100க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாகவே நடித்துள்ளார். அழகான கண்களை கொண்ட நடிகை மாதவியின் கண்ணழகுக்கு மயங்கிய பல இளசுகள் மாதவியை கண்ணழகி என வர்ணித்து அழைத்து வந்தனர்.


சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த இவர், 1996ம் ஆண்டு தொழிலதிபத் ரால்ப் சர்மா என்பவரை திருமணம் செய்து நியூ ஜெர்சியில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய இவர், கணவன், குழந்தைகள் என ஒரு மகிழ்ச்சியா வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.மாதவி - ரால்ப் தம்பதியினருக்கு டிஃபனி கௌரிகா, பிரிசில்லா அர்பனா மற்றும் ஈவ்லின் திவ்யா என மூன்று மகள்கள் உள்ளனர்.


பல நடிகர், நடிகைகள் குறித்து பேசி வரும் சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், நடிகை மாதவியின் திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். அதில், நடிகை மாதவி கமல், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் கண்ணழகி மாதவி என்று அழைத்தார்கள். அந்த அளவிற்கு அவரின் கண்கள் வசீகரமாக இருக்கும்.


நடிகை மாதவிக்கு ஆன்மீகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு இதன்காரணமாக, சாமியார் ராம என்பவரின் பக்தையாக மாறி, திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார். இதைதெரிந்து கொண்ட சாமியார் ராம, தொழிலதிபர் ரால்ப் சர்மாவை அறிமுகப்படுத்தி, அவரை திருமணம் செய்து கொள்ளும்படி சொன்னார். நடிகை மாதவியும் சாமியாரின் பேச்சை தட்டாமல், ரால்ப் சர்மாவை திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு விலகி இப்போது மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
 

From Around the web