”தொழிலதிபரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டேன்” பிரபல நடிகை அறிவிப்பு..!!
அனுராக் கஷ்யப் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘தேவ் டி’. இது தேவ்தாஸ் கதையின் நவீன வடிவமாக தயாரானது. ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்ற இந்த கதையில் கதாநாயகியாக நடித்த மாஹி கில்.
இந்த படத்தில் நடித்தற்காக விமர்சகர் பிரிவில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை அவர் வென்றார். அதை தொடர்ந்து இந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் தயாரான பல படங்களில் நடித்துள்ளார். மிட்டி வாஜான் மார்டி, குலால், தபங், ஷாகப், பீவி மற்றும் கேங்கஸ்டர் போன்ற படங்கள் மிகவும் குறிப்பிடப்பட வேண்டியவை ஆகும்.
இந்நிலையில் சமீபத்தில் மாஹி கில் அளித்துள்ள பேட்டியில், தொழிலதிபர் ரவி கேசரை திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் வெரோனிகா என்கிற பெண் குழந்தை உள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தகவலை வெளியிடாமல் இருந்ததாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தான் எப்போதும் திருமணம் செய்துகொள்ளப் போவது இல்லை என்று மாஹி கில் கூறி வந்தார். தற்போது அவருடைய திருமண தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியம் அடையச் செய்துள்ளது. இதற்கிடையில் பல பாலிவுட் பிரபலங்கள் மாஹி கில் மற்றும் ரவி கேசருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.