”தலைவலிதானே... என்று நினைத்துவிடக்கூடாது”- மாளவிகா எச்சரிக்கைப் பதிவு..!!
தமிழில் ஒளிப்பரப்பான அண்ணி தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் மாளவிகா அவினாஷ். தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவினாஷ் என்கிற கன்னட நடிகரை திருமணம் செய்து பெங்களூருவாசியாகி விட்டார்.
அங்கு பல்வேறு தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவருக்கு அண்ணி சீரியல் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது. அதை தொடர்ந்து ஜே.ஜே படத்தில் கதாநாயகியின் சகோதிரியாக நடித்தார். மேலும் சில படங்களில் நடித்தார்.
பைரவா, கைதி மற்றும் கே.ஜி.எஃப் போன்ற படங்களில் இவருடைய நடிப்பு கவனமீர்த்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க-வில் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறது.
தன்னுடைய உடல்நலம் தொடர்பாக சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ள மாளவிகா, யாரும் ஒற்றை தலைவலியை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். அப்படி நான் நினைத்ததால், நிறைய கஷ்டங்களை அனுபவித்துவிட்டேன். இப்போது மருத்துவமனையில் உள்ளேன். நீங்களும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 - cini express.jpg)