தங்கலான் ஷுட்டிங்கில் விக்ரம் பார்த்த வேலை- போட்டுக்கொடுத்த கதாநாயகி..!!

சர்பட்டா பரம்பரை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’. வரலாற்றுப் பின்னணியில் தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ‘பூ’ பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் வாழ்க்கை பின்னணியில் இந்த படம் தயாராகி வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ‘தங்கலான்’ படத்தின் கிள்ம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் தமிழ் ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வரும். அந்த வகையில் நடிகை மாளவிகா மோகனன் புதிய புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தங்கலான் படத்தின் பழங்குடிகளின் தலைவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் டீசரில் அவருடைய தோற்றம் மிரட்டலாக இருக்கும்.
ஆனால் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள படத்தில் மிகவும் சாதாரணமான தோற்றத்தில் உள்ளார். மேலும், தனது டாட்டூக்களையும், அணிந்திருக்கும் கண்ணாடியையும் குறிப்பிட்டு “ஷூட்டிங்கில் இருந்து விடுமுறை கிடைக்கும் போது, அருகிலேயே இப்படிப்பட்ட புகைப்படக் கலைஞர் இருந்தால், அழகாக போட்டோ எடுக்கலாம்” என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
Snakes, ladders & shades 😎
— Malavika Mohanan (@MalavikaM_) March 12, 2023
When you have a day off from shoot & you also have photographer extraordinaire by your side @chiyaan 📸 #thangalaan pic.twitter.com/NC2L9dirnW
தனது பதிவில் அருகிலேயே இப்படிப்பட்ட புகைப்படக் கலைஞர் என்று குறிப்பிட்ட நபர் நடிகர் விக்ரம் தான். அவரை டேக் செய்து தான் மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு நெட்டிசன்களிடையே கவனமீர்த்துள்ளது. மேலும் தங்கலான் படத்துக்காக தயாராகமல், விக்ரமோடு போட்டோ செஷனா என்று ரசிகக் கண்மணிகள் கமெண்டு செய்து வருகின்றனர்.