தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிடுவோருக்கு காட்டமாக பதிலடி கொடுத்த நடிகை மீனா..!
Jul 23, 2024, 16:05 IST

கணவர் வித்யாசாகர் காலமானதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார் மீனா.
இந்நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதற்கு அவர் முன்பே மறுப்பு தெரிவித்திருந்தார்.
வதந்தியைப் பரப்புவோர் தன்னைப்போல் குழந்தைகளுடன் இருக்கும் ஏராளமான பெண்களைப் பற்றி ஒருமுறையாவது யோசித்துப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், மீனாவின் திருமணம் குறித்து மீண்டும் வதந்திகள் பரவி வருகின்றன. இதையடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் மீனா.
“வெறுப்பாளர்களால் வதந்திகள் உருவாக்கப்படுகின்றன. அவை முட்டாள்களால் பரப்பப்பட்டு, முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன,” என்று மீனா தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.