நடிகை மீரா மிதூனுக்கு ஜாமீன் கிடைத்தது..!

 
மீரா மிதூன்

பட்டியலின மக்களை இழிவாக பேசி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில் நடிகை மீரா மிதூன் மற்றும் அவருடைய நண்பர் இருவருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடிகை மீரா மிதூன் பட்டியலின மக்களை அவதூறாக பேசி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் சில அமைப்புகள் அவர் மீது வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்டஅவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வீடியோவை பதிவு செய்த மீரா மிதூன் நண்பரையும் போலீசார் கைது செய்தனர். 

கடந்த இரண்டு முறையும் ஜாமீன் வழங்காமல் மீரா மிதூன் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நடிகை மீரா மிதூன் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

From Around the web