திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை மிருணாள் தாகூர்..!!

 
1

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர் . துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதா ராம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகை மிருணாள் தாகூருக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

தனது குறும்புத்தனமான நடிப்பாலும் அழகிய நடந்தாலும் நாளுக்கு நாள் மவுசு ஏறி வரும் நடிகை மிருணாள் தாகூருக்கு படம் வாய்ப்புகள் அதிகம் வர தனது சம்பளத்தையும் பல மடங்கு உயர்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை மிருணாள் தாகூர் தனது திருமண வாழ்க்கை குறித்து முதல் முறை வெளிப்படையாக பேசியுள்ளது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மிருணாள் தாகூர் கூறியதாவது :

உறவுகள் கடினமானவை என்பதை நாம் அறிவோம். நமக்கு பிடித்த சரியான துணியை தேர்ந்து எடுப்பது எப்படி கஷ்டமோ அதேபோல் நமக்கு பிடித்த வாழ்க்கை துணியை தேர்ந்தெடுப்பதும் கடினம்.

எதனை நாட்கள் ஆனாலும் நாம் சரியானதைக் கண்டுபிடிக்க வேண்டும். எங்கள் தொழில் வாழ்க்கையை புரிந்துகொள்ளும் நபராக எனது வாழ்க்கை துணை இருக்க வேண்டும் என நாடியை மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.

From Around the web