நடிகை மும்தாஜ் ஓபன் டாக்..! சினிமாவிலிருந்து விலக அல்லா தான் காரணம்! திருமண ஐடியாவும் இல்லை! 

 
1

90 ஆம் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்திலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார் மும்தாஜ். இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது.

ஆனாலும் காலம் செல்ல செல்ல சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் தன்னை ஒரு கவர்ச்சி நடிகை ஆக காட்டிக் கொண்டார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களில் நடித்த இவர், விஜய் உடன் குஷி படத்தில் கட்டிப்பிடி கட்டிப்பிடிடா என்ற பாடலுக்கு நடனமாடி இளசுகளை ஒரு வழி செய்திருந்தார். இந்த பாடல் மிகவும் ஹிட்டானது.

இதைத்தொடர்ந்து நடிகை மும்தாஜ், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் வழங்கிய பேட்டியில் தான் திருமணம் செய்து கொள்ளாமைக்கான காரணத்தை வெளிப்படையாக கூறியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

எனக்கு திருமணம் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் எனக்கு திருமணம் செய்து கொள்கின்ற யோசனையே இல்லை என்பதுதான். எத்தனையோ பேர் என்னை ப்ரபோஸ்கள் செய்துள்ளார்கள். ஆனாலும் எனக்கு திருமணம் குறித்த எண்ணமே இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்ததாகவும் எனக்கு குர்ஆன் பற்றி நன்றாக தெரியும். எனக்கு சில விஷயங்களை அல்லாஹ் இதை செய்ய வேண்டும் இதை செய்யக்கூடாது என கட்டளை இட்டுள்ளார். 

ஆரம்பத்தில் அதில் சொல்லப்பட்ட விஷயத்தின் அர்த்தம் தெரியாமல் இருந்ததாகவும் ஒரு கட்டத்தில் இது புரிய ஆரம்பித்த போது தனக்குள் ஒரு மாற்றம் தொடங்கியதாகவும் அதன் காரணமாக தான் சினிமாவில் இருந்து விலகியதாகவும் மேலும் கூறியுள்ளார் மும்தாஜ்.

From Around the web