கேரள புடவையில், குடும்ப குத்து விளக்காக மின்னும் நடிகை நயன்தாரா..!

 
1

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஒருபுறம் திரைப்படங்களில் நடிப்பது, பட தயாரிப்பு  என பரபரப்பாக இருந்தாலும், மற்றொருபுறம்  குழந்தைகள் மற்றும் கணவரோடு நேரம் செலவிடுவது, கோயில்களுக்கு செல்வது என அதற்கும் நேரம் ஒதுக்கிவருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய குழந்தைகளுடன், பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகைகளை கொண்டாடி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா, தற்போது கேரள மக்களால் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் விசு பண்டிகையை கணவரோடு கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் விக்னேஷ் சிவன் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து ஜோராக உள்ளார். அதேபோல் நயன்தாராவும் வெள்ளை நிற கேரள புடவையில், தலையில் மல்லிகை பூ, நெற்றியில் பொட்டு என குடும்ப குத்து விளக்காக  ஜொலிக்கிறார். ஆனால் தங்களின் குழந்தைகளோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இருவருமே பதிவிடவில்லை.

சமீபத்தில், நயன் – விக்கி ஜோடி தங்களுடைய மகன்களான உயிர் ருத்ரோனில் மற்றும் உலக் தைவிக் புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாரா ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதுவே அவரது முதல் ஹிந்தி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From Around the web