நடிகை நயன்தாரா தந்தை கவலைக்கிடம்... தனியார் மருத்துவமனையில் அனுமதி!!
Jul 12, 2021, 06:05 IST

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நயன்தாரா. இவருக்கும், டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் நீண்டகாலமாக காதல் இருந்து வருகிறது. நயன்தாராவை திருமணகோலத்தில் பார்க்கவேண்டும் என்று அவருடைய தந்தை குரியன் கொடியத்து ஆசைப்பட்டார்.
இந்த நிலையில், குரியனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையொட்டி, அவர் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நயன்தாரா அருகில் இருந்து தந்தையை கவனித்து வருகிறார்.
தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் துபாயில் உள்ள மகனுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் கொச்சி திரும்பினார்.