சமூக வலைத்தளத்தில் என் கணவரை கிண்டல் பண்ணறாங்க - நடிகை நீலிமா குமுறல்..!!
ரசிகர்களிடையே பிரபலமான சீரியல் நடிகையான அறியப்படுவர் நீலிமா ராணி. சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்து பிரபலமானவர். அதன்பிறகு தேவயானியுடன் ‘கோலங்கள்’, ராதிகாவுடன் ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல மெகா ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தேவர் மகன், பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பிறகு திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கவுதம் கார்த்திக்கின் ஆகஸ்ட் 16 1947 படத்தில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் நடிகை நீலிமா ராணி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் தனது கணவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பதால், அவரை பலரும் தாத்தா என்று கிண்டல் பண்றாங்க. ஆனால் இதுபோன்ற விமர்சனங்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை. அவருக்கு டை அடித்துக் கொள்வதில் துளியும் விருப்பமில்லை என்று கூறியுள்ளார். அவரது பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.