வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களமிறங்கிய நடிகை நிகிலா விமல்!

 
1

 நடிகை நிகிலா விமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்  பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிக்கித் தவித்த வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களையும் மீட்பு துறையினர் பத்திரமாக மீட்டு வருகின்றார்கள்.

இந்த மீட்பு பணியில் சினிமா நடிகை நிகிலா விமல் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர் அமைப்பான டி.யு.ஒய்.எஃப் உடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை சேகரித்து வருகின்றார். தற்போது அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றார்கள்.

From Around the web